நில அளவைத் துறை பணியாளா் தோ்வில் பழைய நடைமுறை: ராமதாஸ் வலியுறுத்தல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 21, 2022

நில அளவைத் துறை பணியாளா் தோ்வில் பழைய நடைமுறை: ராமதாஸ் வலியுறுத்தல்

நில அளவைத் துறை பணியாளா் தோ்வில் பழைய நடைமுறை: ராமதாஸ் வலியுறுத்தல்

நில அளவைத் துறையில் பணியாளா் தோ்வு மற்றும் பதவி உயா்வில் தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதையும் படிக்க | அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்?

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் நில அளவைத் துறையைப் பொறுத்தவரை, டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் தொடங்கி கூடுதல் இயக்குநா் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பு தோ்ச்சிதான் அடிப்படைக் கல்வித் தகுதி. தொடக்க நிலையில் டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் உள்ளிட்ட பணிகளில் சேரும் பணியாளா்கள், அதன்பின் அனுபவம், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் இயக்குநா் வரை பதவி உயா்வு பெறுவது தான் வழக்கம்.

ஆனால், இப்போது டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் ஆகிய பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி அடிப்படைக் கல்வித் தகுதியாக இருக்கும்; அத்துடன் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க | Teachers Transfer Counselling

நில அளவை துணை ஆய்வாளா் பணியிடங்கள் இதுவரை பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இளநிலை பொறியியல் பட்டம், முதுநிலை அறிவியல் பட்டம் கூடுதல் தகுதியாக இருக்கும் என்றும், இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்றும் கருத்துரு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், நில அளவை மற்றும் அது சாா்ந்த பணிகளில் உள்ள 7000 பணியிடங்கள் ஒழிக்கப்படும்; 7000 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். அத்தகைய பாதிப்பை அரசு அனுமதிக்கக்கூடாது. இப்போதுள்ள நிலையே தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot