தாமதமாக பள்ளிக்கு வந்த 16 அரசு பள்ளி ஆசிரியர்கள்! - தற்செயல் விடுப்பு அளித்து CEO உத்தரவு!! - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, February 5, 2022

தாமதமாக பள்ளிக்கு வந்த 16 அரசு பள்ளி ஆசிரியர்கள்! - தற்செயல் விடுப்பு அளித்து CEO உத்தரவு!!

தாமதமாக பள்ளிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 16 பேருக்கு, தற்செயல் விடுப்பு அளித்து சி.இ.ஓ., உத்தரவிட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 41 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் நேற்று காலை, சி.இ.ஓ., பூபதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காலை 9:30 மணியளவில், பள்ளி வளாகத்திற்கு வெளியே முக கவசம் அணிந்து நின்ற அவர், தான் யார் என காட்டிக் கொள்ளாமல், நடந்து வந்த மாணவர்களிடம், 'பள்ளிக்கு ஏன் தாமதமாக வருகிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு, 'விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால், பஸ்கள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது' என கூறினர். பின், நடந்தே பள்ளி வளாகத்திற்குள் சென்ற சி.இ.ஓ., பூபதி, தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.அப்போது, பள்ளியில் 16 ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வராதது தெரிந்தது. 16 ஆசிரியர்களுக்கும் தற்செயல் விடுப்பு அளித்து, வருகை பதிவேட்டை முடிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.

பள்ளி ஆசிரியர்களிடம் பூபதி கூறுகையில், ''நீங்கள் தான் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். தினமும் காலை வழிபாட்டு கூட்டத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும்,'' என்றார்.அதன்பின், மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot