கோரிக்கை அட்டையுடன் பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் முடிவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 2, 2022

கோரிக்கை அட்டையுடன் பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் முடிவு

கோரிக்கை அட்டையுடன் பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் முடிவு

திண்டுக்கல், ஜன. 1: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்நாள் களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தி னர் முடிவெடுத்துள்ளனர்.

பணி ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள் 23 ஆயிரம் பேருக்கு, இதுவரை பணிக்கொடை வழங்கப்படவில்லை. பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கான குடும்ப ஓய்வூதியம் வழங் கப்படவில்லை. ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியமும் வழங்கப் படவில்லை என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டி வரு கின்றனர். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதி யத் திட்டம் அமல்படுத்துவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, அந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி, இந்த கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய முடிவெடுக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் ஜனவரி 5 முதல் 12ஆம் தேதிவரை தேர்தல்வாக்குறுதிப்படிசிபி எஸ் திட்டத்தை ரத்து செய்திடுக என்ற கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரியவுள் ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot