ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி - இன்று தொடக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 9, 2022

ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி - இன்று தொடக்கம்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவு வலுவூட் டல் பயிற்சி திங்கள்கிழமை (ஜன. 10) முதல் பிப்.25 வரை வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணை யர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை: தமிழகத்தில் உள்ள மாவட்டங் களை மண்டலங்களாகப் பிரித்து மண் டலங்களில் உள்ள பள்ளிகளில் இயக்கு நர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் வகுப்பறை உற்றுநோக்கல் மற்றும் பள்ளிப் பார்வையினை மேற்கொண்டு வருகின்ற னர்.

இந்தநிலையில் தஞ்சாவூர், திருநெல் வேலி, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வகுப் பறை உற்று நோக்கல் சார்ந்து பெற்ற விவ ரங்களை ஆய்வு செய்தபோது மாணவர்க ளுக்கு கற்றல் அடைவுகளை (Learning Out comes) அடையச் செய்வதற்கான ஆசிரியர் களின் முயற்சிகளை வலுப்படுத்த வேண்றின் டிய அவசியம் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கற்றல் அடைவு களை மாணவர்களுக்கு எவ்வாறு அடை யச் செய்வது என்பது குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் பத் தாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைவருக் கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட் டல் பயிற்சி திங்கள்கிழமை முதல் வழங் கப்படவுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களு டன் இணைந்து இந்தப் பயிற்சியை வழ கத் திட்டமிட வேண்டும். பயிற்சி பெற கருத்தாளர்கள் வட்டார தலைமையிடத் தில் தெரிவு செய்யப்படும் உயர்நிலைப் பள் ளியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற் சியை வழங்க வேண்டும்.

இந்தப் பயிற்சி முறையாக நடைபெறுகி றதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஆசி ரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கண்கா ணிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள் ளார். ஒவ்வொரு பாடங்களுக்கும் பின்பற் றப்படும் கற்பித்தல் உத்திகள் மற்றும் அவற் செயல் விளக்கம், மதிப்பீடு, பின்னூட் டம் என பல்வேறு செயல்பாடுகள் இந்தப் பயிற்சியின்போது மேற்கொள்ளப்படவுள் ளன. வரும் பிப்.25-ஆம் தேதி வரை ஆசி ரியர்களுக்கான கற்றல் அடைவு வலுவூட் டல் பயிற்சிகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot