'தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை' - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, January 14, 2022

'தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை'

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 - 18 வயதுக்குரிய மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் காரணத்தால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து பெற்றோரும், தங்களது 15 - 18 வயதுடைய பிள்ளைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.

15 - 18 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஹரியாணாவில் மட்டும் சுமார் 15 வயதுடைய சிறார்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களாவர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot