10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் தகவல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 17, 2022

10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கோவை மாவட்டத்தில் 10,12- ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு ஆன்லைன் மூலம் திருப்புதல் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. தற்போது, 10 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிலையில், அதிக ரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாண வர்களின் நலனை கருதி வரும் 31-ம் தேதி வரை 10,11 மற்றும் 12-ம் வகுப்பு உள் ளிட்ட அனைத்து வகுப் புகளுக்கும் விடுமுறை அளிப்பதாக நேற்று தமி ழக அரசு அறிவித்தது.

வரும் 19-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில், மாண வர்களின் நலனை கருத் தில் கொண்டு கோவை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதா வது:

கோவை மாவட்டத் தில் 10,12-ம் வகுப்பு படிக் கும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19-ம் தேதி முதல் நடத்தப் பட இருந்தது. அரசின் அறிவிப்பை அடுத்து நேரடியாக தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. இருப்பினும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ள னர். எனவே, அவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர் கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி. வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி, மாணவர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தேர்வு எழுதிய பின் வினாத்தாளை மாண வர்கள் மீண்டும் வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்ய வேண்டும். இதனை ஆசிரி யர்கள் மதிப்பீடு செய்வார் கள். இதனால், மாணவர் களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும். படித்தது வீணாகாது. இவ் வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot