தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றன. இருப்பினும், பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்

No comments:
Post a Comment