பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.22 - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.01.22


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: கூழியல்

அதிகாரம்: பொருள் செயல் வகை

குறள் எண் : 754

குறள்:
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பொருள்:
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

பழமொழி :
A bad workman blames his tool.


ஆடத் தெரியாதவர் மேடை கோணல் என்றாராம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.___அம்பேத்கர்



பொது அறிவு :

1. ஐசிசியின் " சிறந்த டி20 வீராங்கனை 2021" விருதுக்காக இந்தியாவில் யார் பெயர்       பரிந்துரைக்கப்பட்டுள்ளது?  

ஸ்மிருதி மந்தனா.


2. கல்பனா சாவ்லா விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி   மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 

பஞ்சாப்.

English words & meanings :

 Monitor - a screen used to display information

Monitor - to watch or observe something over a period of time
ஆரோக்ய வாழ்வு :

* சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும்.

* வாழைப்பூ வேகவைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வர நீரிழிவுநோய் கட்டுப்படுத்தப்படும் .அஜீரணம் அகலும்.
கணினி யுகம் :

Ctrl + Shift + @ - Angstrom Accent. 

Ctrl + , - Cedille Accent

ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்





கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959)[1] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]
1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 

கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்




கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

*1. எனது நேர்மை.*
*2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.*

*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.* 

*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.*


இன்றைய செய்திகள்

06.01.22

★கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்துடன், புதிய பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

★புதுச்சேரி: அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காக ரூ.15 கோடியில் சமையல் கூடம் திறப்பு.

★தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

★பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரையில் முதல் இரண்டு டோஸ் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

★அதிகரிக்கும் கரோனா தொற்றால் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி: பயோ மெட்ரிக் பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.

★கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதைத் தொடரலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

★தங்கள் நாட்டு கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது.

★ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு- பெங்கால் இடையேயான ஆட்டம் டிரா.

★ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு - டாப் 10ல் இரண்டு இந்திய வீரர்கள்.


Today's Headlines

 ★ As the corona spread intensifies again, Chief Minister Stalin has ordered the implementation of the night curfew in Tamil Nadu from tonight and the full curfew on Sunday.  In addition, various new restrictions have been imposed.

 ★ Puducherry: Rs 15 crore kitchen opened for government school children.

 ★ The Election Commission has stated that 10.17 lakh new voters have been added in Tamil Nadu.

 ★ The federal government has advised that the booster should have the same type of first two doses of vaccines that were given.

 ★ Federal government offices are allowed to operate with 50 percent of staff due to rising corona infection and also Announced the banning of bio-metric systems.

 ★ The World Health Organization (WHO) says that the isolation of Corona infected people  for 14 days can continue 




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot