மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிநிரவலில் விலக்கு - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 5, 2022

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிநிரவலில் விலக்கு - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

'மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிநிரவலில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும். என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மாநில செய்தி தொடர் பாளர் முருகேசன் கூறியது: 2019ல் நடந்த கலந்தாய் வில் கண் பார்வையற்றவர் கள் சட்டம் 1995ன் படி 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் தாம் விரும்பும் அல்லது தான் பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அவருக்கு பதில் அவருக்கு முந்தைய நிலையில் உள்ளவரை பணி நிரவல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு பணிநிரவல் கலந்தாய்வில் 40 சதவீதம் கண் பார்வை யற்றோர் மட்டும் அதே பள்ளியில் பணியாற்றலாம் என அரசு ஆணை பிறப்பித் திருக்கிறது.

இதனால் கை, கால் ஊனமுற்றோர், முடக் குவாதத்தால் பாதிக் கப்பட்டோர், மனவ ளர்ச்சி குன்றியவர்கள் போன்ற மாற்றுத்தி றனாளிகள் பாதிக்க வாய்ப்புண்டு. எனவே 40 சதவீதத்திற்கும் மேல் உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் முக்கியத் துவம் அளித்து, அவர்கள் பள்ளியிலேயே தொடர அனுமதிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot