TNPSC குரூப் 2, குரூப் 4, VAO தேர்வுகளில் காலி பணியிடங்கள் எத்தனை?.. இதோ முழு விவரம்..!!! - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

TNPSC குரூப் 2, குரூப் 4, VAO தேர்வுகளில் காலி பணியிடங்கள் எத்தனை?.. இதோ முழு விவரம்..!!!

தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. இதில் துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித்தகுதி அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் முதல்வர் முக.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 3,50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்த நிலையில் அண்மையில் அரசு பணியாளர் தேர்வாணையம் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் தொடர்ப்பாக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில் குரூப்-2 தேர்வானது இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, ஆடிட் இன்ஸ்பெக்டர், நன்னடத்தை அதிகாரி, தொழில் கூட்டுறவு அதிகாரி, உதவிப்பிரிவு அதிகாரி போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும் குரூப்-4 தேர்வு தொடர்பாக மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும். அதுமட்டுமின்றி மாதிரி வினாத்தாள்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வுகளுக்கு மொத்தம் 11,000 காலியிடங்கள் இருக்கிறது.

இந்த காலி பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதனால் ஏறத்தாழ 14 ஆயிரம் இடங்களில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot