கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதிபெற்றவர்கள் யார்? - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதிபெற்றவர்கள் யார்?

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில், தகுதி பெற்ற இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தோ்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பொது நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் குறித்து பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக கூட்டுறவு வங்கிகளில் சென்றும் இது பற்றி அறிந்து கொள்ளலாம்.

கூட்டுறவு தங்க நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதி பெறுபவர்களுக்கான நிபந்தனைகள்..

1. தமிழக அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டையில் இடம்பெற்றள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து, அவர்களின் அனைத்துபொது நகைக்கடன்களும் சேர்த்து மொத்த எடை 40 கிராமுக்கு உள்பட்டு இருந்தால். இதில் கண்டுள்ள இதர தகுதிகளுக்கு உள்பட்டு அந்த நகைகடன்கள் தள்படி செய்யப்படும்.

2. கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் 31.03.2021 ஆம் நாள் வரை 5 பவுனுக்கு மிகாமல், உள்ள நகைகளுக்கு (மொத்த எடை 40 கிராம் வரை) ஈடாகப் பெற்ற மொத்த நகைக்கடன்களில், அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையைப் பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும் இந்தப் பட்டியலில் கண்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத நேர்வுகளை நீக்கியும், மீதம் நிலுவையில் உள்ள பொது நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.

3. பொது நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட 31.03.2021 அன்று வரை தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில், அவர்கள் பகுதியாக செலுத்தியிருப்பின், அவ்வாறு பகுதியாக செலுத்திய நிலுவைத்தொகை நீங்கலாக மீதம் நிலுவையில் இருந்த தொகை மட்டுமே தள்ளுபடிக்கு கணக்கில் எடுத்தக் கொள்ளப்பட வேண்டும். 4. 31.03.2021ஆம் தேதியில் தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில் நிலுவை இருந்து, அதன்பின்னர் அரசாணை வெளியிடப்படும் நாள் வரை கடன் நிலுவைத் தொகையில் பகுதியாக செலுத்தப்பட்டிந்தால், அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை நீங்கலாக எஞ்சிய கடன் நிலுவைத் தொகை மட்டுமே தள்ளுபடியில் இடம்பெற வண்டும். இந்த நேர்விலும் இந்தப் பட்டியலில் கண்டுள்ள இதர தகுதிகளை பூர்த்தி செய்யும் குடும்பத்தினருக்கே தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்.

5. ஆதார் எண்ணின் அடிப்படையில், ஒரே நபர் மற்றும் குடும்ப அட்டையில் கண்டுள்ள அவர்தம் குடும்பத்தினரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் மொத்த எடை 40 கிராமுக்குட்பட்டு பல நகைக்கடன்கள் பெற்றிருந்து, அக்கடன்கள் அனைத்தும் சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்குட்பட்டிருந்தால் மட்டுமே இந்தப் பட்டியலின்படி இதர தகுதிகளுக்கு உள்பட்டு அக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட தகுதியானதாகும்.

8. தமிழ்நாடு அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய இதர நிபந்தனைகளுக்கு உள்பட்டு இருந்தால் அவர்களும் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

9. கடன்தாரரின் குடும்ப அட்டை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டையைக் கொண்டுள்ள கடன்தாரர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot