திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கவனத்திற்கு - Press Release dt:16.12.2021 - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, December 16, 2021

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கவனத்திற்கு - Press Release dt:16.12.2021

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்...

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 18.12.2021 (சனிக்கிழமை) 08.15 AM முதல், 19.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) 10.22 AM வரை, திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தேசிய கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ்,இ.ஆ.ப. அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot