அரையாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 21, 2021

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு, இனிய வணக்கங்கள்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பான அரையாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவிக்குமாறு வேண்டுதல்

1. ஆண்டாண்டுக்காலமாக, ஒவ்வொரு வருடமும் அரையாண்டுத் தேர்வு முடிவின் இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகையும், புத்தாண்டு பிறப்பும், சேர்ந்து வருவதை ஒட்டி டிசம்பர் 22 முதல் ஜனவரி 1 அல்லது 2 வரை தமிழக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து வருவதை நமது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள்.

2.இவ்வாண்டு அரையாண்டுத்தேர்வு (திருப்புதல் தேர்வுகள்) டிசம்பர் 24 வரை நடைபெறுகிறது. 25.12.2021 கிறிஸ்மஸ் சனிக்கிழமை அன்று வருகிறது. அடுத்த நாள் 26.12.2021 ஞாயிறு ஆகும். அதைப்போன்றே புத்தாண்டும் 1.1.2022 சனிக்கிழமை பிறக்கிறது. மறுநாள் 2.1.2022 ஞாயிறு ஆகும். ஆக வழக்கம் போல் விடக்கூடிய அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இந்த ஆண்டு 4 நாட்கள் வழக்கமான விடுமுறை நாட்களாக வந்து விடுகின்றன.

3. ஆகவே அரையாண்டுத் தேர்வுகள் (திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்ததும் 25.12.2021 முதல் 2.1.2022 வரை அரையாண்டுத் தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விடுமுறையாக) விடுமுறையாக இவ்வாண்டும் வழக்கத்தை மாற்றாமல், அறிவித்திட வேண்டிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள தங்களை நாங்கள் மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

4. ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை (கிறிஸ்மஸ் விடுமுறை) என்ற பெயரில் 10 அல்லது 11 நாட்கள் கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை வழங்கும். ஆனால் இந்த வருடம் 27.12.2021 முதல் 31.12.2021 வரை 5 நாட்கள் மட்டுமே அரையாண்டுத்தேர்வுக்கான விகமுறையாக அளிக்கால் போதுமானது மற்ற நாட்கள் 25.12.2821 கிறிஸ்மஸ் அரசு விகமுறை 26.12.2021 ஞாயிறு: 1.1.2022 சனிக்கிழமை ஆங்கில வருட பிறப்பு அரசு விதமுறை மறுநாள் 2.1.2022 ஞாயிறு விடுமுறை என்று வருவது ஒரு சிறப்பு அம்சமாகும்.

5. ஆகவே மேற்கூறியவைகளின் அடிப்படையில் அருள்கூர்ந்து இவ்வாண்டும் 28.12.2021 முதல் 2.1.2022 வரை அரையாண்டு தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விகமுறைக்கான) விடுமுறையாக அறிவித்து, கொன்று தொட்டு பின்பற்றிவரும் நடைமுறை வழக்கத்தை உயர்த்திப் பிடிக்க ஆவன செய்யுமாறு மதிப்பு மிகு ஆணையர் அவர்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot