வருமான வரி சரிபார்க்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 29, 2021

வருமான வரி சரிபார்க்க அவகாசம் நீட்டிப்பு

கடந்த 2019-2020க்கான வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்தவர்கள், அதை சரிபார்ப்பதற்கான அவகாசம், அடுத்தாண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-2020ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்த பெரும்பாலோர், அதை சரிபார்ப்பதற்கான படிவம்-5ஐ இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளனர். இதை கருத்தில் கொண்ட ஒன்றிய நேரடி வருமான வரித்துறை, இதற்கான அவகாசத்தை 2022ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதை காகிதத்தில் கையொப்பமிட்டு பெங்களூரு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பியவர்களுக்கும், ஆன்லைன் மூலமாக மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கும் இந்த சரிபார்ப்பு கால அவகாசம் பொருந்தும். இந்த சரிபார்த்தல் பணியை வரி செலுத்துவோர் கட்டாயமாக 2022 பிப்ரவரி 28ம் தேதிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. *20-21 கணக்கு தாக்கல் நாளை கெடு முடிகிறது

கடந்த 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், இன்னும் ஏராளமானோர் கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளனர். நாளையுடன் இதற்கான கெடு முடிவதால், அதன் பிறகு இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவகாசம் நீட்டிப்பு வரும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கின்றனர். ஆனால், அதற்கான அறிவிப்பு எதையும் வருமான வரித்துறை இன்னும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot