‘ஜீரோ’ டிரான்ஸ்பர் கவுன்சிலிங் ஏ.இ.ஓ.,க்கள் வலியுறுத்தல் - தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பாதிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

‘ஜீரோ’ டிரான்ஸ்பர் கவுன்சிலிங் ஏ.இ.ஓ.,க்கள் வலியுறுத்தல் - தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பாதிப்பு

தமிழகத்தில் 5 ஆண் டாக நடத்தாமல் உள்ள வட்டார கல்வி அலுவ லர் டிரான்ஸ்பரை 'ஜீரோ' கவுன்சிலிங்காக நடத்த வேண்டும், என கல்வி அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வித்துறையின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு நலத் திட்டம் வழங்கல் உள் ளிட்ட பணிகளை கண் காணிக்கும் பொறுப்பில் வட்டார அளவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அளவில் 681 வட்டார கல்வி அலுவ லர்கள் உள்ளனர். இவர் களுக்கு ஆண்டு தோறும் மே மாதம் பொது மாறு தல் கவுன்சிலிங் நடத்தப் படும். கவுன்சிலிங் நடத்துவ தின் மூலம் வட்டார கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராவ தற்கான வாய்ப்பு கிடைக் கும். ஆனால் கடந்த 5ஆண்டாக இவர்களுக் கான டிரான்ஸ்பர் கவுன்சி லிங் நடத்தப்படவில்லை. 2016ல் ஆக.,ல் தான் முழுமையாக டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.

அதற்கு பின் 2019 ல் நடந்த கவுன்சிலிங்கில் 3 ஆண்டிற்கு மேல் ஒரே இடத்தில் இருந்த அலுவ லர்கள் மட்டுமே டிரான்ஸ் பர் செய்யப்பட்டனர். 2016க்கு பின் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 681 வட் டார கல்வி அலுவலர்க ளுக்கும் பொது இடமாறு தல் கவுன்சிலிங் நடத்தவே இல்லை.

இதனால் உயர்நிலைற்றும் பள்ளி தலைமை ஆசிரி யர் பதவி கிடைக்காமல் வட்டார கல்வி அலுவலர் கள் தவித்து வருகின்றனர்.

எனவே வட்டார கல்வி அலுவலர்களுக்கு 'ஜீரோ' கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என வலியுறுத் துகின்றனர்.

முதல்வரிடம் சங்கங்கள். புகார் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் கே.காமராஜ் கூறியதாவது, தமிழக அளவில் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பொது இடமாறுதல் மற் பதவி உயர்வு கவுன் சிலிங் நடத்த வேண்டும் என முதல்வரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்."

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot