இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்புப் பணி அலுவலரின் கள ஆய்வு தகவல்கள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்புப் பணி அலுவலரின் கள ஆய்வு தகவல்கள்

இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்புப் பணி அலுவலர் திரு.க. இளம்பகவத் அவர்கள் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையங்களை நேற்று கள ஆய்வு செய்தார். ஆய்வுக்குபின் அதுகுறித்த தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். முதல் மாவட்டங்களில் நடைபெறும் சில மையங்கள் பள்ளிகளில் செயல்படுகின்றன. கள ஆய்வு செய்ததில் சில பள்ளிகளில் காலையிலிருந்து மாணவர்களை வகுப்பறைகளில் அங்கேயே கார வைத்திருக்கிறார்கள் இதனால் மாணவர்கள் வீட்டுக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு புத்துணர்வோடு வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் பள்ளிக்கூடத்தின் அதே இறுக்கத்துடன் மையங்கள் செயல்படுகின்றன.

இதனால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு சென்று உடை மாற்றிக் கொள்ளவும் புத்துணர்வு பெறவும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்த பிறகே இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க வேண்டும் . இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர் வீடுகளுக்கு அருகில் அமைய வேண்டும் பொதுவான இடங்களில் இம்மையங்களை அமைக்கலாம் . தனியார் இடமாக இருப்பினும் பள்ளி மேலாண்மை குழு அனுமதியுடன் அந்த இடத்தில் மையம் செயல்படலாம் . பெரும்பாலும் அவை பள்ளி வகுப்பறைக்குள் இல்லாமல் இருப்பது நலம் பள்ளி முடிந்த பிறகு மாணவர்கள் வீட்டுக்குச் சென்று திரும்பி வருவதற்கு குறைந்தபட்சம் 40- 45 நிமிடங்கள் நேரம் அளித்து மாலை 5 மணிக்குப் பிறகே மையங்கள் தொடங்கப்பட வேண்டும் . சிலர் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களை பள்ளி முடிந்த உடனடியாக துவங்க வலியுறுத்துவதாக தெரிகிறது . இது முற்றிலும் தவறானதாகும் . குழந்தைகள் உற்சாகத்துடன் மையங்களுக்கு வரும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர பெரியவர்களின் வசதிக்கு ஏற்ப செயல்பட கூடாது.

வீடுகளுக்கு மாணவர்களை அனுப்பி அவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு சிற்றுண்டிகள் சாப்பிட்டுவிட்டு வரும் மையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். எனவே இந்த வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மையங்களிலும் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot