அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, December 30, 2021

அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை, டிச.29: நடப்புக் கல்வியாண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துறைசார் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில் 46 லட்சத்து 50 ஆயிரத்து 671ஆக இருந்த அர சுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, நடப்பு கல்வியாண்டில் (2021-22) 53 லட்சத்து 24,009 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண் ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6 லட்சத்து 73 ஆயி ரத்து 338 அதிகமாகும்.

அந்த வகையில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் நடப்புக் கல்வி யாண்டில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 285 மாணவர்கள் அரசுப் பள் ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 37 ஆயி ரத்து 554 அரசுப் பள்ளிகளில் 53 லட்சத்து 24,009 மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். கடந்த 2020-21 கல்வியாண் டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1 லட்சத்து 28 ஆயி ரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வி யாண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot