அரையாண்டு விடுமுறையில்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

அரையாண்டு விடுமுறையில்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரையாண்டு விடுமுறை விடா த்தால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாயினர். தமிழகத்தில் ஆண்டுகளாக கடந்த இரு கொரோனா சூழல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுழற்சி முறையில் படிப்படியாக அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட் டன. திங்கள் முதல், சனி வரை ஆறு நாட்களுக்கு பள்ளிகள் வேலைநாட்க ளாக செயல்பட்டு வருகின்றன. ஜனவரி முதல் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு, அனைத்து வகுப்பு களும் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் முதல், தொடர்ந்து வாரத்துக்கு ஆறு நாள் வீதம் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், அரையாண்டு விடுமுறைக்கு ஆசிரி யர்கள் காத்திருந்தனர். வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத் தாண்டு விடுமுறையுடன் இணைந்து, 10 நாள் வரை அரையாண்டு தேர்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. நடப்பு கல்வியாண்டில், இதற்கு பதில், டிசம்பர், 20 முதல், 30 வரையில் திருப் புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட் டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வருவதால், அன்று மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள் ளது. இதனால் தொடர்ந்து நான்கு மாதம் வரை, வாரத்துக்கு ஆறு நாட்கள் என பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், அறை யாண்டு விடுமுறை வழங்காததா ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot