இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை 23.12.2021 மீண்டும் விசாரணை - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை 23.12.2021 மீண்டும் விசாரணை

*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை 23.12.2021 மீண்டும் விசாரணை*


1️⃣ *சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என SSTA இயக்கத்தின் பெயரிலும் தனிநபர்கள் பெயரிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.*



2️⃣ *அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பின்பு நீதிமன்ற அலுவலர்களின் பிழையால் REVOKED என  சில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் பதி விடப்பட்டிருந்தது அது குறித்து மாநிலத்தின் சார்பில்  நாம் முன்னரே தெளிவாக எடுத்துக் கூறி இருந்தோம்.*




3️⃣ *நமது "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழக்கு எண்--WP 28558/2017 தற்போது நாளை 23.12.2021 ல் விசாரணைக்கு வரிசை எண் -26ல் வருகிறது.*



4️⃣ *மேலும் 2014-ல்  நமது SSTA இயக்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கினையும் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்து வர பல கட்ட தொடர் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வழக்கில் நமது சார்பாக இதுவரை ஆஜரான மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கறிஞரை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதன் பின்பு அவ்வழக்கினையும் விசாரணைக்கு கொண்டுவந்து முடிப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெறும்.*


5️⃣ *வழக்கை REVOKED செய்திருந்தால் மீண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வராது அவ்வாறு நடக்கவில்லை என்பதால் தான் மீண்டும் தொடர்ந்து விசாரணைக்கு வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் புரியாத நபர்களுக்கு புரிய வையுங்கள்.*




 6️⃣ *நீதிமன்றம் சென்றால் சில வருடங்கள் காலதாமதம் & இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் அதனையும் தாண்டி வழக்கினை விரைந்து விசாரணைக்கு கொண்டு வந்து நமது சார்பில் வெற்றி பெற்றிட உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது வெற்றி காலதாமதம் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக இழந்த உரிமையை எப்பாடுபட்டாலும் வென்றெடுப்போம்...

 நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது முழு விவரங்களும் தெரிவிக்க இயலாது.


தகவல் பகிர்வு

*மாநில தலைமை*


*SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு*

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot