பள்ளிக்கல்வி அமைச்சர் நெல்லையில் நாளை ஆய்வு - 5 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

பள்ளிக்கல்வி அமைச்சர் நெல்லையில் நாளை ஆய்வு - 5 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

பள்ளி சுவர் இடிந்து 3 பேர் பலியான நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் நெல்லையில் நாளை ஆய்வு

5 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

நெல்லை, டிச. 22: நெல்லையில் 5மாவட்ட கல்வி அலுவலர்களுடன் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆய்வு நடத்துகி றார். நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் நடை பெற உள்ள இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மண்டல அளவில் ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தென் காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுந கர் ஆகிய 5 மாவட்டங்களில் கல்விப்பணி குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நெல் லையில் நாளை (23ம் தேதி) நடக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங் கேற்று ஆய்வு நடத்துகிறார். இதில் சமீபத்தில் நெல்லையில் சாப் டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான நிகழ்வு மற்றும் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பிற பள்ளிகளில் நடத்தப் பட்ட கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுகளின் அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

முன்னதாக இந்த ஆய்வு தொடர்பாக முன் நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காக நெல்லை மண்டலத்திற்கான இயக்குனர் கருப்பசாமி, இணை இயக் குனர்கள் கோபிதாஸ், குமார் ஆகியோர் இன்று நெல்லை வருகின்றனர். இவர்கள் சாப்டர் பள்ளி மற்றும் சில பள்ளிகளை இன்று ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot