திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் தொழில் கடன் பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொழில் கடன் வழங்கிட, பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாகவும் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கங்கள் மூலமாகவும் கடன் வழங்கிட நடவடிக்கை
தொழில் தொடங்கிட விருப்பமுள்ள 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகள் வெள்ளைத்தாளில் தொழில் குறித்த விபரங்களை தெரிவித்து, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (மருத்துவர் சான்றுடன்), ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (3 நகல்கள்), திட்டத்திற்கான விலைப்புள்ளிப் பட்டியல் (கொட்டேசன்), செய்யும் தொழிலுக்கான விபரம், ஜாமின்தாரர் ஒப்புதல் (Surety) ஏதேனும் இருப்பின் அதன் விபரம் உள்ளிட்ட தகுந்த ஆவணங்களுடன் இணைத்து, "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் 624004." நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 31.12.2021 அன்று மாலை சமர்ப்பித்து பயன் பெறலாம். என்ற முகவரிக்கு 5.00 மணிக்குள்
மேலும் தகவல்களுக்கு 0451-2460099 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தகவல்களுக்கு 0451-2460099 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment