தமிழகத்தில் இனி அனைத்து பள்ளிகளிலும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்லிய தகவல்..! - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, December 20, 2021

தமிழகத்தில் இனி அனைத்து பள்ளிகளிலும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்லிய தகவல்..!

தமிழகத்தில் அரசு பள்ளி மட்டும் இல்லாமல் தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என எந்தப் பள்ளியாக இருந்தாலும் கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் என்னும் நிலத் தரகர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் நியமன கோரிக்கையை வைத்துள்ளார்கள், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றார். மேலும் தமிழகத்தில் தற்பொழுது, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு, பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டடங்கள் இடிக்கப்படும்போது அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களைச் சேர்த்து அமரவைத்து, கல்வி பயில வழிவகை செய்ய உள்ளோம். முதற்கட்டமாக திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனை இடித்து பின்னர் பணிகளைத் தொடங்குவோம். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுப்பணித் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து குழுவாகப் பள்ளி கட்டடங்களை இடிக்கும் இந்தப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்’ என கூறினார்.

இந்தப் பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ரூ.75 கோடி ஒதுக்கினார்கள். ஆனால், தற்போது 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். திருநெல்வேலி விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, இந்த நிகழ்வு மிகவும் வருந்தக்கூடிய ஒன்று. இனி தமிழகத்தில் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல; தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என எந்தப் பள்ளியாக இருந்தாலும் கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்வோம்’ என கூறினார்.

1 comment:

  1. இது போன்ற பள்ளி வளாகத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்... அதற்கு செலவு செய்வதில் ஒரு பலன் உண்டு... அதை விடுத்து, பள்ளி வளாகம் வெளியே, பள்ளிக்குத் தொடர்பில்லாத கல்விப் பணியில் தேவையற்ற சிலவு செய்வது சரியல்ல...

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot