மாணவிகளுக்கு 3ம் பருவ பாட புத்தகங்களில் உதவி எண்கள் அச்சிட்டு வழங்க உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

மாணவிகளுக்கு 3ம் பருவ பாட புத்தகங்களில் உதவி எண்கள் அச்சிட்டு வழங்க உத்தரவு

பாலியல் பிரச்னைகளை தடுக்கும் வகையில், 3ம் பருவ பாட புத்தகங்களில் உதவி எண் களை அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ள தாகபள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சில ஆசி ரியர்கள் மற்றும் மாண வர்களால் பாலியல் துன் புறுத்தல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும், பாலியல் பிரச்னைகளுக்கு ஆளா கும் சில மாணவிகள் விபரீதமுடிவுகளை எடுக் கின்றனர். இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிக்கல்வி துறை பல்வேறு அறிவிப் புகளை வெளியிட்டுள் ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் உளவியல் நிபுணர்களை அனுப்பி, மாணவிகள் மற்றும் மாணவர்களுக்குகவுன்ச லிங் வழங்கப்படுகிறது. அதே போல், மாண விகளின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக் கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறை 2021 கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாலியல் பிரச்னை ஏற் படாமல் தடுக்க, பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங் கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சி யாக 3ம் பருவ பாடபுத்த கங்களில், மாணவிகளுக் கான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி எண்களை அச்ச டித்து வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர் களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட் டுள்ளனர்.

அதன்படி, '14417’, '1098' ஆகிய எண்களை பாட புத்தகத்தின் முன் பக்கத்தில் அச்சிட்டு வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகத்தின ருக்கு ஆலோசனை அளித்துள்ளதாக, பள் ளிக்கல்வி துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறு கையில், 'மாணவிகளுக்கு வழங்கும் 3ம் பருவ பாட புத்தகங்களில் பாலியல் புகார்கள் தொடர்பான உதவி எண்கள் அச் சிட அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதன்படி புத்தகங்க ளில் முன்பகுதியில் புகார் எண்கள் மற்றும் வாச கங்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும்' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot