'1100'க்கு தொடர் அழைப்பு கணினி ஆசிரியர்கள் நுாதனம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 29, 2021

'1100'க்கு தொடர் அழைப்பு கணினி ஆசிரியர்கள் நுாதனம்

பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி, முதல்வரின், '1100' குறைதீர் எண்ணுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

தனியார் பள்ளி போலவே, அரசு துவக்கப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்வதால், தமிழகத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என, ஆசிரியர் சங்கத்தினர், 10 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் முதல்வரின், '1100' என்ற குறைதீர் எண்ணுக்கு, நுாதன முறையில் தங்கள் கோரிக்கையை முன்வைக்க துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறுகையில், ''தினமும், 5 ஆயிரம் வீதம் கடந்த மூன்று நாட்களாக புகார் தெரிவித்து வருவதால், '1100' சேவை மையமே ஸ்தம்பித்துள்ளது. பொதுவான கோரிக்கையாக ஏற்று, முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot