பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த 50லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 29, 2021

பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த 50லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

வேளாண்மை-உழவர் நலத்துறை - அறிவிப்புகள் 2021-22 - பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.50.00 இலட்சம் நிதி ஒப்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:

14.8.2021 அன்று வேளாண்மைத்துறையின் நிதிநிலை அறிக்கையின் போது மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பிறவற்றுடன் பின்வரும் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்:

"பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்"

பனை மேம்பாட்டு இயக்கம்

* பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நடப்பாண்டில் 30 மாவட்டங்களில், 76 இலட்சம் பனை விதைகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் (ரூ.1.00 கோடி). தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை மரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் (ரூ.50.00 இலட்சம்).

பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பனை வெல்லம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் பனங்கருப்பட்டி காய்ச்சல் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியமும் வழங்கப்படும் (ரூ.50.00 இலட்சம்). 2. மேற்சொன்ன அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் காணும் கடிதத்தில், தமிழ்நாடு பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கள் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.50.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்க வேண்டி திட்டத்திற்கான பொருள்வாரியான விவரங்கள் அடங்கிய கருத்துருவினை கீழ்க்கண்டவாறு அனுப்பியுள்ளார். மேலும், பனை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பின்னணி, அடிப்படை குறிக்கோள். திட்ட காலவரையறை, செயல்பாடுகள் மற்றும் பயனாளிகள் ஆகியவற்றினை இணைப்பில் காணலாம்.

3. தமிழ்நாடு பல்கலைக் கழகத் துணைவேந்தரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, "பனைமாத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot