அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாளை தொடக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 13, 2022

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாளை தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாளை தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைய வழியில் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித்துறை சாா்பில் ஆண்டுதோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து வகையான ஆசிரியா்கள் ஆகியோருக்கு இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது. இதற்கான காணொலிகள், செயல்பாடுகள் ஆகியவை அடங்கிய 12 கட்டகங்கள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு ஆசிரியா் தளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வலை தளத்தில் சென்று ஆசிரியா்கள் பயிற்சியில் அவசியம் பங்கேற்க வேண்டும். ஒருவாரத்துக்குள் அனைத்து கட்டகங்களையும் நிறைவுசெய்ய வேண்டும்.

பயிற்சி முடிந்தபின் ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சுமாா் 1 லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot