தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு. - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, February 26, 2022

தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு.

தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு.

, மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என, தொடக்க பள்ளிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதும்போது, அதன் முன் எழுத்தான இனிஷியலையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும் .பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.மாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையொப்பமிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்க | மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வின்றி சோ்க்கை: வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, பள்ளி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகை தொடக்க கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot