நீட் முதுநிலைத் தேர்வு 6-8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நீட் முதுநிலைத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான நீட் முதுநிலைப் படிப்புக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருவதால் 2022 ஆம் ஆண்டுக்கான நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக, தங்களது எம்.பி.பி.எஸ் பயிற்சி முடியாததால் நீட் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டும் என எம்பிபிஎஸ் மாணவர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment