அரசுப் பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்ய கோரி அறிக்கை வெளியீடு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 9, 2022

அரசுப் பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்ய கோரி அறிக்கை வெளியீடு

ஊழலுக்கு இடமளிக்காத வகையில், தமிழ கத்தில் அனைத்து அரசுப் பணி களுக்கும் நேர்காணல் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலி யுறுத்தினார்.

இது தொடர்பாக சனிக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக் கான ஆள்தேர்வு பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இனி மேற் கொள்ளும் என்று மாநில அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு அனைத்து பொதுத்துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக் கப்பட்டன. அவை பணியா ளர் நியமனங்களில் தகுதி, திற மைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற் படுத்துவதற்கு பதிலாக முறை கேடுகளும், ஊழலும் பெருகுவ தற்குத்தான் வழிவகுத்தன. ஆகவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயல்பாடுகளில் சீர்திருத்தங் கள், மாற்றங்களை மேற்கொள் ளாமல் பணியாளர் நியமனங் களில் ஊழலை ஒழிக்க முடி யாது. மின் வாரியமாக இருந் தாலும், அரசுப் போக்குவரத் துக் கழகமாக இருந்தாலும் ஓட்டுநர், நடத்துநர், வயர் மேன் உள்ளிட்ட அடிப்படைப் பணி களில் தொடங்கி பொறியாளர் பணி வரை அனைத்துப் பணிக ளுக்கும் நடத்தப்படும் நேர்கா ணல்கள் தான் ஊழலின் ஊற் றுக்கண்ணாக திகழ்கின்றன.

பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களை அரசுப் பணி யாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுத்தாலும்கூட, அங் கும் நேர்காணல்கள் நடத்தப் பட்டால் முறைகேடுகளையும் ஊழலையும் தடுக்க முடியாது என்பது பாமகவின் திடமான கருத்து. எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளுக் கும் நேர்காணலை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆ. ணையிட வேண்டும் என்று கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot