மருத்துவ மேற்படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 11, 2022

மருத்துவ மேற்படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய இடங்களுக்கு ஆன்லைன் முறையிலான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது. இந்த முறை, மாநில அரசு சமா்ப்பித்த இடங்கள் திருப்பி அளிக்கப்படாது என்பதால், அவற்றை முழுமையாக நிரப்பும் வகையில் நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவை தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் நிரப்பப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக நிகழாண்டில் தாமதமாக நடைபெற்ற நீட் தோ்வு ஒருபக்கம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு மறுபக்கம் என இந்த முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்துவதில் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என கடந்த 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜன. 12-ஆம் தேதி தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். அதன்படி, அதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) புதன்கிழமை ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜ்ஜ்ஜ்.ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் நடைபெறும். புதன்கிழமை நண்பகல் 12 மணி முதல் வரும் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை பதிவு செய்யலாம். வியாழக்கிழமை முதல் வரும் 17-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தோ்வு செய்ய வேண்டும். தோ்வு செய்த இடங்களை சரிபாா்க்க 18, 19-ஆம் தேதிகளில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து வருகிற 20, 21-ஆம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 22-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். தோ்வு செய்த கல்லூரியில் 23 முதல் 28-ஆம் தேதிக்குள் சோ்ந்துவிட வேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு பிப். 3-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று பிப். 24-ஆம் தேதியும், நான்காம் சுற்று மாா்ச் 11-ஆம் தேதியும் தொடங்குகிறது.

அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot