பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்விற்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 10, 2021

பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்விற்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள்

பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்விற்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள்

1. பள்ளி வளாகம், சுற்றுப்புறம் துாய்மை செய்யப்பட்டு இருக்கவேண்டும்.

2. Covid-19 தொற்று காரணமாக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிதல், சானிடைசர், சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை அன்றாடம் செய்தல் போன்ற செயல்பாடுகள் பள்ளிகள் நடைமுறையில் இருக்கவேண்டும்.

3. EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகையை தினந்தோறும் பதிவிடுதல், நலத்திட்டங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். 4. நலத்திட்டங்கள் தொடர்பாக பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளையும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப்படவேண்டும். ஆய்வு அலுவலர்களின் பார்வைக்கு

5. கற்றல் கற்பித்தல் பணிகளை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய இருப்பதால் பாடக்குறிப்பேடு, கற்றல் உபகரணம் ஆகியவை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு தயார்நிலையில் இருக்கவேண்டும்.

6. HI-Tech Lab மூலம் அனைத்து கணினிகளும் சரிவர இயங்குவதை உறுதி செய்யவேண்டும்.

7. தினந்தோறும் பள்ளிகளில் செயல்படுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும்.

15.12.2021 அன்று ஆய்வு அலுவலர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது தலைமையாசிரியர்கள் அவர்கள் கேட்கக்கூடிய அனைத்து விவரங்களையும் அளிக்கும் வகையில் தயார்நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot