எம்.டி. (ஓமியோபதி) பட்டமேற்படிப்பு மாணவர்சேரக்கை
2021-2022 ஆம் கல்வியாண்டு
தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஒயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி. (ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான AAIPGET-2021-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
1, அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
2. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் சென்னை-106 அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி இயக்குநரகத்திலோ தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் ம) ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளிலிருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது
விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய தொடக்க நாள்: 28.12.2021 காலை 10.00 மணி
* விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்:18.01.2022 பிற்பகல் 05.00 மணி * புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க
கடைசி நாள்
வரை
:18.01.2022 பிற்பகல் 05.30 மணி வரை.
விண்ணப்ப கட்டணம் தகுதி. மேற்கண்ட படிப்புகளுக்கான சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் www.tnhealth.tn.gov.in - என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் கிடைக்கபெறும்
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய தகவல் தொகுப்பேட்டினை படித்து அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினை பு+ர்த்தி செய்து உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரியில் 18.01.2022 பிற்பகல் 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்கவேண்டும் தாமதமாக கடைசி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது
கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் / ஆணைகளின்படி பின்பற்றப்படும்.
No comments:
Post a Comment