பள்ளிகளின் ஆய்வு குறித்த ரிப்போர்ட் டிசம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 24, 2021

பள்ளிகளின் ஆய்வு குறித்த ரிப்போர்ட் டிசம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிளின் தரம், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முழு ரிப்போர்ட் வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். நெல்லையில் நடைபெறும் பள்ளி, கல்வி நிலையங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பள்ளிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நெல்லை உள்ளிட்ட 7-மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஆலோனை கூட்டம் நெல்லையில் வைத்து இன்று நடைபெறுகின்றது இதில் பல்வேறு கருத்துக்கள் பறிமாறப்பட உள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த நாள் முதல் மாணவர்கள் முககவசம் அணிதல்,சமூக இடைவெளி விட்டு அமர்வது மட்டுமின்றி சேதமடைந்த பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது அதைபோல் பள்ளிகளில் உள்ள பயன்பாடு இல்லாத மின்சார பொருட்கள் சோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்ய வேண்டும் என்று கல்வி நிலையங்களுக்கு தெரிவித்திருந்தோம். ஆனால் அதையும் மீறி இதுபோல் சம்பவம் நடந்துள்ளது. இனிமேல் இப்போல் சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

நெல்லையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அந்தந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் ரிப்போட் கொடுத்து வருகின்றனர்‌. இந்த மாத இறுதிக்குள் பள்ளிகளின் தரம் குறித்து முழு ரிப்போட் வரும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பள்ளிகள் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் நடைபெறும் பகுதியில் தடுப்பு வேலி வைக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot