தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜன.2ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 24, 2021

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜன.2ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை

தமிழகத் தில்பள்ளிகளுக்கு நாளை' முதல் ஜன 2ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுவ தாகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

நெல்லை சாப்டர் பள் ளியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி யானநிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுந கர் ஆகிய 5 மாவட்டகல் வித்துறை அதிகாரிகளு டன், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு நடத்தினார்.

சபாநாயகர் அப் பாவு தலைமை வகித்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், எம்பிக்கள் ஞானதிரவி யம், தனுஷ்குமார், பள் ளிக் கல்வித்துறை ஆணை யர் நந்தகுமார், கலெக்டர் விஷ்ணு மற்றும் எம்எல்ஏக் கள், அதிகாரிகள் பங்கேற் றன். பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத் தில் ஒவ்வொரு மாவட் டத்திலும் பழுதான கட் டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர்கள் உத்தரவிட் டுள்ளனர். இது தொடர் பாக முதன்மைக் கல்வி அலுவலர்களும் புள்ளி விவரம் தயாரித்து வரு கின்றனர். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 168 இடங்களில் வகுப்ப றைகள், பிற கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கட்டி டம் இடிக்கப்பட்டால்,கற் றல் பணி நிற்கக் கூடாது என்பதற்காக அருகில் உள்ள கட்டிடங்களில் வாடகை அடிப்படை யில் வகுப்பறைகளை தொடர்ந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகமான மாணவர் கள் பயிலும் பள்ளிகளில் இடைவேளை நேரத்தை மாற்றுவது, கண்காணிப் பது குறித்த ஆலோசனை கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பஸ்களில் படிக் கட்டுகளில் மாணவர் கள் தொங்கிச் செல்லக் கூடாது. அதற்காக கூடு தல் பஸ்கள் இயக்கலாமா, நேரம் மாற்றம் செய்ய லாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் பள்ளி களுக்கு 25ம் தேதி (நாளை) முதல் ஜன 2ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுகி றது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot