ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - அமைச்சர் அன்பில் மகேஸின் அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 28, 2021

ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - அமைச்சர் அன்பில் மகேஸின் அறிவிப்பு

தமிழகத்தில் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதம் பொது தேர்வு • அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தமிழகத்தில் 10. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், துறைசார் இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் பொது மாறுதல் கலந்தாய்வு, முழுநேர வகுப்பு கள், திருப்புதல் தேர்வு, பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை இடித்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக் கப்பட்டன. பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது; பள்ளியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 1,600 பள்ளிகளில் பழுதான கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை துரிதமாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு பதிலாக, நிதி நிலைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் அமைத்து தரப் படும்.

10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து, ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு தொடங்கும்.

தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே, முதல்வர் அறிவுறுத்தலின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்படி காலி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot