வங்கிப்பணி போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - 41,177 காலி பணியிடங்கள் அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, December 13, 2021

வங்கிப்பணி போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - 41,177 காலி பணியிடங்கள் அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலி பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், எஞ்சிய 95 சதவீத பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளார். பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், அவர்களால் சரிவர பணி செய்ய முடியாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா என மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:

* நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 986 பணியிடங்கள் உள்ளன. டிசம்பர் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி இந்த வங்கிகளில் 41 ஆயிரத்து 177 பணியிடங்கள் காலியாக உள்ளன.

* நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்கள் அளவில் 95% ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 5% என்ற சிறிய அளவிலான காலி பணியிடங்களே நிரப்பப்படாமல் உள்ளன.

* இதில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கியில் 8,544 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதிகாரிகள், கிளார்க், துணை ஊழியர்கள் ஆகிய 3 பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதில், அதிகாரிகள் பணியிடம் 3,423ம், கிளார்க் பணியிடங்கள் 5,121ம் காலியாக உள்ளன.

* பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,743 காலியிடங்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6,295 காலியிடங்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5,112 காலியிடங்களும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,848 காலியிடங்களும் உள்ளன. வங்கிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது இடங்களை நிரப்பி வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து எந்தவிதமான பதவியிடங்களையும் ஒன்றிய அரசு நீக்கவில்லை.

நிலக்கரி சுரங்கஒதுக்கீட்டில் ஏல முறை மக்களவை ஜீரோ நேரத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் என் உத்தம் குமார் ரெட்டி, ` பொதுத்துறை நிறுவனமான சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் லிமிடெட் (எஸ்சிசிஎல்) உடன் இணைந்து அமைந்துள்ள 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எஸ்சிசிஎல் தொழிலாளர்கள் 50,000 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாளொன்றுக்கு 120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, `தற்போது ஏலம் தொடங்கி விட்டது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடும் துவங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தன்னிச்சையாக செயல்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சுரங்க ஒதுக்கீட்டு விதி, கொள்கைகளை பின்பற்றவில்லை. ஆனால், பாஜ அரசு கொள்கைகளை பின்பற்றி ஏலமுறையில் ஒதுக்கீடு செய்துள்ளது,’ என்று தெரிவித்தார். உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய உயர்வு மசோதா தாக்கல் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான திருத்த மசோதாவை ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1954, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1958 ஆகிய மசோதாக்கள் மக்களவையில் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ரிஜிஜூ கூறுகையில், `இந்த திருத்த மசோதாவினால் நீதிபதிகளின் ஓய்வூதியம் மட்டுமே உயர்த்தப்படும். சம்பளத்தில் எந்த பாதிப்பும் இருக்காது,’ என்று கூறினார். அதன் பிறகு, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இந்த மசோதா குறித்த விவாதத்துக்கு அழைப்பு விடுதார். அப்போது பேசிய திமுக எம்பி. வில்சன், `உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை தற்போதைய 62 வயதிலிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை தற்போதைய 65 வயதில் இருந்து 70 வயதாக உயர்த்த வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார். கிரிப்டோகரன்சி அரசின் நிலைப்பாடு என்ன? மக்களவையில் ஜீரோ நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, `ஒன்றிய அரசு கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்க இருந்த நிலையில், பிரதமரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் அரசு கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் அதற்காக மக்களுக்கு வினியோகிக்க 500 பிட்காயின்களை வாங்கி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது நாட்டின் தனிநபர் ரகசியம் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பிரதமரின் டிவிட்டர் கணக்கு 2 முறை ஹேக் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது? இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. எனவே, கிரிப்டோகரன்சி, பிரதமரின் டிவிட்டர் ஹேக் குறித்த அரசின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் அரசு விளக்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot