போட்டி தேர்வு ஆதார் எண் இணைக்க அவகாசம்
டி.என்.பி.எஸ்.சி.,யின் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களின் நிரந்தர தகவல் பதிவு விபரங்களில், பிப்.,28க்குள், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.,சி., அதன் நிர்வாக முறைகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேர்வின் முடிவுகள், பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், போட்டி தேர்வுகளை விரைவாக முடிக்கவும், சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.டி.என்.பி.எஸ்.சி.,யின் நிரந்தர பதிவு தகவல்களில், அனைத்து தேர்வர்களும் தங்களின் ஆதார் எண் விபரங்களை, பிப்., 28ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும்.
தேர்வர்கள் தங்களின் ஒருமுறை பதிவு கணக்கு வழியாகவே, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இதுகுறித்து, விளக்கம் ஏதாவது தேவைப்பட்டால், 1800 4190 958 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில், அலுவலக வேலைநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.மேலும், helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in என்ற இ-- மெயிலிலும் தகவல்களை அனுப்பலாம்.

No comments:
Post a Comment