நீட் தேர்வு எதிர்த்து போராடிய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 6, 2022

நீட் தேர்வு எதிர்த்து போராடிய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுர உச்சியில் ஏறி, நீட் தேர்வு எதிர்த்து போராடிய மாணவர்கள் மீதான வழக்கை ஐகோர்ட் கிளை ரத்து ெசய்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் குருராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி கடந்த 8.9.2017ல் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாயில் முன் மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் நீட் தேர்வை திரும்ப பெறக் கோரி முழக்கமிட்டனர். அப்போது திடீரென சிலர் ஆண்டாள் கோயில் கோபுர உச்சியின் மீது ஏறி கோஷமிட்டனர். இதுதொடர்பாக திருவில்லிபுத்தூர் டவுன் போலீசார் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் சேவியர் ஆஜராகி, ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது எதிர்காலம் பாதிக்கும். எனவே, இந்த வழக்கை ரத்து ெசய்ய வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரருக்கு வயது 24 ஆகிறது. மற்ற மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 18 முதல் 19 வயது இருக்கும். மனுதாரர் வேறு எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. அதேநேரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இது வழக்கிலுள்ள அனைவருக்கும் ெபாருந்தும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot