சேலத்தில் கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவிகளை வெளியே அமர வைத்த தனியார் பள்ளி குறித்த வீடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் முழு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை, வகுப்பறைகளுக்கு வெளியே அமர வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், கல்வி கட்டணம் செலுத்த வந்த பெற்றோர்கள் சிலர், மாணவிகளை ஏன் வெளியே அமர வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
அப்போது, பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனிடையே, பள்ளியில் பெற்றோர்கள் திரண்டதையடுத்து, மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அனைத்து மாணவர்களும் முதல் தவணை கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள கட்டணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது

No comments:
Post a Comment