கலைகளோடு கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் திண்டுக்கல் அரசுப்பள்ளி ஆசிரியர் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 6, 2022

கலைகளோடு கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் திண்டுக்கல் அரசுப்பள்ளி ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் திரு.அ.ஷாஜஹான் என்பவர் , இன்றைய கொரானாச்சூழலில் பள்ளிக்கு வரும் மாணவச்செல்வங்களை மகிழ்விக்கும் வகையில் கலகலவகுப்பறையாக மாற்றி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் ஒயிலாட்டம், கும்மியாட்டம், பொம்மலாட்டம் கலைகளோடு இணைந்த கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்பட்டு மாணவர்களை பள்ளிக்கு வர வைக்கிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி விடுமுறை நாட்களில் நாட்டுப்புறக்கலைகளின் தன்னார்வராக இருந்து இணையவழியில் மாணவச்செல்வங்களுக்கு கலைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக இவர் பணியாற்றியபோது பள்ளி மற்றும் சுற்றுப்புறச் சுத்தம் சுகாதாரம் சிறப்பாக பேணியதற்கான தமிழ் நாடு அரசின் புதுமைப்பள்ளி விருது, இன்பையர் அறிவியல் ஆய்வுக்கான மாவட்ட விருதும் பள்ளிக்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார்.. மேலும் தமிழ் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தமிழ் நிகழ்வுகளில் மகாகவி பாரதியாராகவும், திருவள்ளுவராகவும் , கோமாளியாகவும், வேடமிட்டு பங்கேற்கிறார்... இவரின் ஆசிரியர் பணி, தமிழ்ப்பணி, கலைப்பணி, சமூகப்பணிகளை பாராட்டி 205 க்கு மேற்பட்ட விருதுகளும், 250 மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது..ஆசிரியர் பணி அறப்பணி அதை நீ அற்பணி என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று திகழ்ந்து வருகிறார்..

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot