மாணவர் பெயரை சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்யும் முறை - பள்ளிகளுக்கு உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 2, 2022

மாணவர் பெயரை சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்யும் முறை - பள்ளிகளுக்கு உத்தரவு

பிறப்பு சான்றிதழ் அடிப்படையிலேயே மாணவர் பெயரை சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் - பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் மாணவருடைய பெயர், தாய், தந்தையின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கை பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 2020-21-ம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவருடைய பெயர், தாய், தந்தை பெயர் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்குவதற்கான கலங்கள் கொண்ட ஒரே மாதிரியான படிவத்தினை பயன்படுத்துதல் வேண்டும்.

10-ம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. பெயர் பட்டியல் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடைய பெயர், தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்யும் போது எவ்வித தவறும் இல்லாமல் சரியாக பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot