பள்ளி கல்வி துறையில் ஆறு பேருக்கு தேசிய விருது - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 9, 2022

பள்ளி கல்வி துறையில் ஆறு பேருக்கு தேசிய விருது

பள்ளி கல்வி துறையில் ஆறு பேருக்கு தேசிய விருது

பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உட்பட ஆறு பேருக்கு, கல்வி நிர்வாகத்தில் புதுமை செய்ததற்காக, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க | அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனத்தின் சார்பில், கல்வி நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்துவது மற்றும் சிறந்த நடைமுறை உருவாக்குவோருக்கு, ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதன்படி, பள்ளிக் கல்வி தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருவண்ணாமலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் ஆகியோர், 2018- - 19ம் ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் குன்னுார் வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் ஆகியோர், 2019- - 20ம் கல்வி ஆண்டு விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு காணொலி வழியாக விருது வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot