நீட் தேர்வில் தேறிய டெய்லர் மகன்: டாக்டர் கனவை நனவாக்கிய இட ஒதுக்கீடு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 29, 2022

நீட் தேர்வில் தேறிய டெய்லர் மகன்: டாக்டர் கனவை நனவாக்கிய இட ஒதுக்கீடு!

பனியன் நிறுவனத்தில் பணி செய்யும் 'டெய்லர்' மகன், அரசு பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி திருமுருகன்பூண்டி அருகேயுள்ள பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர். கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லர். தாய், பாரதி. இவர்களது மகன், ஜெகன் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து, 'நீட்' தேர்வெழுதினான். 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இம்மாணவன், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவன் ஜெகன் கூறுகையில், 'என் பெற்றோருக்கு நான் டாக்டராக வேண்டும். என்ற எண்ணம் இருந்தது. என். பயோலஜி ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பாக ஊக்குவித்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்லமுறையில் ஊக்குவித்தால், என்னால் வெற்றி பெற முடிந்தது, என்றார்.

மாணவனின் தந்தை கணேசன் கூறுகையில், "என் மகன் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதற்கேற்ப, தலைமையாசிரியை உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஊக்குவித்தனர். உள் இட ஒதுக்கீடால், எங்களை போன்ற சாமானியன் வீட்டு பிள்ளைக் கூட டாக்டராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் கூறுகையில், "பள்ளி வரலாற்றில் முதன் முறையாக, மாணவன் ஜெகன், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். விடா முயற்சி, கடின உழைப்பே இதற்கு காரணம், என்றார். ஜெகனின் சகோதரி பூரணிஸ்ரீ; அரசுப்பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot