பள்ளிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் - சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 20, 2022

பள்ளிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் - சங்கம் வலியுறுத்தல்

பள்ளிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் - சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக் கல்வி சங்க நிறுவன தலைவர்அ.மா.மாயவன், மாநில தலைவர் எஸ்.பக்தவச்சலம், நிர்வாகிகள் சேது செல்வம், ஜெயக்குமார், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம் விவரம் வருமாறு; தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துவரும் சூழலில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை வல்லுனர்கள் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஆலோசித்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டி வரும் 31ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல முடிவை வரவேற்கிறோம். ஆனால் பள்ளி கல்வித்துறை அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் யாருக்கு கற்பிக்கப் போகிறார்கள். வேறு சில நிர்வாக பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் கூட அதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் தினமும் வரவழைப்பது அவசியம் இல்லை. எனவே, சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளையும் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot