இணையவழி விண்ணப்பங் களைப் பூர்த்தி செய்வதில் தொடரும் தொழில் நுட்பக்கோளாறு உள்ளிட்ட பல்வேறுகாரணங் களால் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந் தாய்வு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்ப டும் பொதுமாறுதல் மற்றும் விருப்ப மாறுதலுக் கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பரவிய கரோனா பெருந்தொற்றுகாரணமாகநடத்தப்படவில்லை. இந்தநிலையில் அரசுப் பள்ளி தலைமையாசிரி யர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இளநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு மற் றும் பணி நிரவல் கலந்தாய்வு வரும் ஜன.19 முதல் பிப்.18 வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து அதற்கான அட்டவணையை யும்வெளியிட்டது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்ப மும், தகுதியும் உள்ள ஆசிரியர்கள் டிச.31-ஆம் தேதி முதல் ஜன.7-ஆம் தேதிக்குள் இணையத ளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற் றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதைய டுத்து ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த அவகாசம் திங்கள்கிழமை (ஜன. 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எமிஸ் தளம் மூலமாக கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக ஆசி ரியர்கள் தெரிவிக்கின்றனர். விண்ணப்பத்தில் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறை குறித்த தக வல்கள் இடம்பெறவில்லை, படிவத்தில் 'தமிழ் என்ற மொழியைத் தேர்வு செய்தால் 'உருது' என காட்டுகிறது. 'பிரிண்ட்-அவுட்' எடுப்ப தற்கான 'ஆப்ஷன்' வரவில்லை. தொடர்ந்து பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்வதிலும் இடர்பாடுகள் உள்ளன. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் இணைய சேவை மையங்கள் மூடப்பட்டி ருக்கும். எங்கு சென்று விண்ணப்பத்தை பதிவேற் றம் செய்வது எனத் தெரியவில்லை என ஆசிரியர் கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்னைகளால் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திட்டமிட்டப்படி ஜன.19-ஆம் தேதி நடைபெறுமா என்ற சந்தேகம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கலந்தாய் வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment