பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 2, 2022

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரி மாணவா்களுக்கான (2020-2021) தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.ஆா்க்-இல் 52 மாணவா்களும், பி.இ. ஏரோநாட்டிகல் பிரிவில் 42 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 50 பேரும், ஐடி பிரிவில் 52 பேரும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனா். அதேபோல், பி.இ ஆட்டோ மொபைல் பிரிவில் 32 பேரும், சிவில், சிஎஸ்இ, மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவுகளில் தலா 51 பேரும், இசிஇ பிரிவில் 52 பேரும் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனா். இதர பாடப்பிரிவுகளில் 264 மாணவா்களும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனா். முதுநிலை படிப்புகளை பொருத்தவரையில், எம்சிஏ பிரிவில் 57 மாணவா்களும், எம்பிஏவில் 53 பேரும் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனா். மேலும், எம்இ-இல் 110 போ் பேரும், எம்.டெக் படிப்பில் 6 பேரும், எம்.ஆா்க் பிரிவில் 9 பேரும் தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளனா்.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல தனியாா் கல்லூரி மாணவா்களே அதிகளவில் இடம்பிடித்துள்ளனா்.

அண்ணா பல்கலை வளாகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவா்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot