ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி முதல் கட்டம் இன்று துவக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 30, 2022

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி முதல் கட்டம் இன்று துவக்கம்

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி முதல் கட்டம் இன்று துவக்கம்

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, இன்று முதல் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. பயிற்சியில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாகியுள்ளன. பிப்., 19ல் நடக்க உள்ள தேர்தலில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், சில இடங்களில் கல்லுாரி பேராசிரியர்களும், தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும், மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. இரண்டாவது பயிற்சி வகுப்பு, 9ம் தேதி; மூன்றாம் பயிற்சி வகுப்பு, 18ம் தேதியும் நடக்கிறது.தேர்தல் பணிக்கு தேர்வான ஆசிரியர்கள், மூன்று பயிற்சி வகுப்புகளிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.இதில், தேவையற்ற காரணங்களை கூறி யாரேனும் புறக்கணித்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எளிய வசதி

நகர்ப்புற உள்ளாட்சி வார்டு எல்லை சீரமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுச்சாவடி விபரத்தை தெரிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் புதிய வசதியை செய்து உள்ளது.வார்டு எண் மற்றும் எல்லை மாற்றப்பட்டுள்ளதால், வாக்காளருக்கு அவ்விபரம் முழுமையாக தெரியவில்லை. மாநில தேர்தல் கமிஷன், 'ஆன்லைன்' வழியாக ஓட்டுச்சாவடி, வார்டு விபரங்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்துள்ளது. ஆன்லைனில், வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், மாவட்டம், உள்ளாட்சி அமைப்பின் பெயர், வார்டு எண், வசிக்கும் வீதி, ஓட்டுச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் என, 11 வகை விபரங்கள், உடனுக்குடன் தெரிய வருகிறது.

அதிகாரிகள் கூறுகையில், 'மாநில தேர்தல் கமிஷன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் ஓட்டுச்சாவடியை அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது. 'இந்த விபரங்களை, https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find-_your_polling_station.php என்ற இணைய தொடர்பில், வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு, அங்கிருக்கும் குறியீட்டு எண்ணை பதிவிட்டால், முழு விபரத்தையும் பெறலாம்' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot