கரோனா பரவல் காரணமாக தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில், 29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 05.02.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக 25.01.2022 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நுழைவு பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment