10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பேசிய நீதிபதி:
கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment