01.01.2022 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 2 ஆக பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 10, 2022

01.01.2022 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 2 ஆக பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!

அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை-II ஆகப் பதவி உயர்வு வழங்கும் பொருட்டு 01.01.2022 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டிய நிலையுள்ளது.

இந்நிலையில் சென்ற ஆண்டு தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு பதவி உயர்வு வழங்கியது போக மீதமுள்ள 121 நபர்கள் எண்ணிக்கை கொண்ட பெயர் பட்டியல் நிலுவையில் உள்ளது. மேலும், நாளது தேதியில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை-II காலிப்பணியிடங்கள் மற்றும் உட டற்கல்வி இயக்குநர் நிலை-II லிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வு வழங்குவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடம் எண்ணிக்கையும் சேர்த்து மொத்த காலிபணியிடத்திற்கேற்ப நடப்பு ஆண்டிற்கு, சென்ற ஆண்டில் மீதமுள்ள 121 நபர்கள் கொண்ட தேர்ந்தோர் பெயர் பட்டியல், உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியலாக வெளியிடப்படுகிறது. அவற்றில் சேர்க்கை / நீக்கம் / திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் அதன் விவரங்களை அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்க்காண் விவரங்களை தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்,

1. சம்மந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களை பணிப்பதிவேட்டுடன் நேரில் வரவழைத்து இத்தேர்ந்தோர் பெயர் பட்டியலில் உள்ள தமது விவரங்கள் பெயர், பணிபுரியும் பள்ளி, பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி மற்றும் பணிவரன்முறை தேதி ஆகியவைகளை சரிபார்த்து சரியாக உள்ளது என சம்மந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்றும், பட்டியலில் இடம் பெறாத உடற்கல்வி ஆசிரியர்யளிடமிருந்து, பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடிக்கப் பெற்று, அரசாணை (நிலை) எண். 107, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை, நாள். 18.08.2009, மற்றும் அரசாணை (நிலை) எண்.242, உயர்கல்வி (பி1) த்துறை, நாள். 18 .12 .2012 ன்படி 10+2+3 (Pattern) என்ற அடிப்படையில், கல்வித் தகுதியுடன், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிடத்திற்கான முறையான கல்வி தகுதியும் பெற்றுள்ள இணைப்புகளுடன் கருத்துருக்கள் பெற்று அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பவேண்டு மெனவும்,

2. இப்பட்டியலில் உள்ள பணியாளர்கள் ஓய்வு பெற்றிருந்தாலோ, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றிருந்தாலோ அது சார்ந்த விவரங்களை அன்னாரின் பெயருக்கெதிரே தெரிவிக்க வேண்டுமெனவும்,

3. இப்பட்டியலில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு வருடத்திற்கு மேல் விடுப்பில் இருந்தாலோ அல்லது தகவலின்றி பணிக்கு வராமல் இருந்தாலோ அவர்களின் விவரம் தெரிவிக்கப்பட வேண்டுமெனவும்,

4. இவ் உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியலில் எந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால், அவர்களுடைய கருத்துருவினை உரிய காலகெடுவிற்குள் தொகுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு இல்லையெனில் தங்களது மாவட்டத்தில் எந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பெயரும் விடுபடவில்லை என்ற சான்றினை முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பட வேண்டுமெனவும், 5. ஒழுங்கு நடவடிக்கை முடிந்து தண்டனை காலம் முடிந்து 01.01.2022 தேர்ந்தோர் பெயர் பட்டியலில் இடம் பெற தகுதியானவர்களின் விவரங்களை முழுமையான வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும்,

6. தங்களது முன்னுரிமையை உரிய இடத்தில் சேர்க்கவில்லை எனத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தங்களது முறையீட்டினை முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் உடன் அனுப்பி வைத்தல் வேண்டு மெனவும்,

7. தற்போதைய அலுவலக முகவரி மாறுபட்டிருப்பின் அதன் விவரத்தையும் உடன் தெரிவித்தல் வேண்டுமெனவும்,

8.மேல்முறையீடு மனு ஏதும் பெறப்படவில்லை யெனில் தெரிவிக்க விவரம் ஏதும் இல்லை எனக் கருதி பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னுரிமை வரிசைப்படி உத்தேச காலிப் பணியிடத்திற்கு ஏற்ப தேர்ந்தோர் பெயர் பட்டியல் ஏற்பளித்து பதவி உயர்வு வழங்கப்படுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி உடற்கல்வி ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் கருத்துருவை நன்கு பரிசீலித்து முழுமையான வடிவில் தொகுத்து இவ்வாணையரகத்திற்கு 20.01.2022 க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்னைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வரப்பெற்ற விவரங்களில் தவறேனும் கண்டறியப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தொடர்புடைய பணியாளர்களே முழு பொறுப்பாவார்கள் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலையும் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot